போன சனிகிழமை என் அறையில் இருந்து அண்ணா நகர் செல்கையில் என் பள்ளி நண்பனுடன் cell ல் பேசி கொண்டிருந்தேன்.பள்ளிகளில் இருந்து குழந்தைகள் போய் கொண்டு இருந்தார்கள். ஒரே இரைச்சலாக இருந்தது. என்ன என்று எதிர்முனையில் கேட்கவும் "கன்றுக்குட்டிகள் போகிறது" என்று சொன்னேன்.
" பாத்து போ மாடு வந்து விட போகிறது" - இது நண்பன் .
"எருமமாடு தான் உன்கிட்ட பேசிகிட்டு இருக்கே" என்று நான் சொல்லவும்.நண்பன் புரியாமல் விழிக்க நான் சின்ன குழந்தைகளை கன்றுக்குட்டிகள் என்று சொன்னதை விளக்கினேன்.
நாம் கூட ஒரு ஒரு கன்றுகுட்டி தான் என்று நண்பன் சொல்ல அது வேண்டுமானால் உண்மைதான் ஒரு காலத்தில் என்று நினைத்து கொண்டேன்.
காரணம் நான் கல்லூரி இரண்டம் ஆண்டு முடிக்கும் வரை என் அம்மா என்னை குளிப்பாட்டி விடுவார்கள். நான் கல்லூரிக்கு போகும் அவசரத்தில் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பேன். என் அம்மாவும் சளைக்காமல் பின்னால் வந்து சாப்பாடு கொடுப்பார்கள். என் அக்கா ,அண்ணனுக்கு கூட கிடைக்காத அன்பு. (நான் கடை குட்டி செல்லமாம் .... ).
நான் நண்பர்களிடம் பேசும் பொழுது அடிக்கடி சொல்லும் வார்த்தை."நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் " என்பது தான்.
வேலை பணம் ,என்று ஒரு கவலையும் கிடையாது.பணம் பற்றிய பயமோ ,நிர்பந்தமோ எனக்கு 23 வயது வரை கிடையாது. ஆனால் இப்போது வந்துவிட்டது நிறைய பொறுப்புகள் இருக்கிறது என்ன செய்ய வளர்ந்து விட்டேனே ...
சரி...............
குழந்தைகளிடம் வன்மங்கள் வளர வாய்ப்பு கம்மி.
என் பள்ளி நண்பர்களின் ஜாதி இன்று வரை எனக்கு தெரியாது. கல்லூரி நண்பர்களின் ஜாதி தெரியும்.(வளர்ந்து தொலைப்பதால் இது முக்கியத்துவம் இருகிறது) ஆனால் அதை பற்றி நான் கவலை கொள்வதில்லை
சின்ன வயதில் அன்று ஈன்ற ஆட்டுக்குட்டிகளையும், பொறித்த கோழிக்குஞ்சுகளையும் தொட்டு பார்த்து மகிழ்ந்த குழந்தை உள்ளம் இன்று ஆட்டுக்குட்டிகளையும், கோழிக்குஞ்சுகளையும் பார்த்தால் திரும்புமா என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
இந்த பதிவை எழுதிய பிறகும் முணுமுணுக்கிறேன் "நாம குழந்தையாகவே இருந்திருக்கலாம் "
என்ன செய்ய "என்ன செய்ய விதி வலியது"
Subscribe to:
Post Comments (Atom)

நல்ல பதிவு !
ReplyDelete"சின்ன வயதில் அன்று ஈன்ற ஆட்டுக்குட்டிகளையும், பொறித்த கோழிக்குஞ்சுகளையும் தொட்டு பார்த்து மகிழ்ந்த குழந்தை உள்ளம் இன்று ஆட்டுக்குட்டிகளையும், கோழிக்குஞ்சுகளையும் பார்த்தால் திரும்புமா என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது"-- ஆம் திரும்பும் என்பதே என் பதில் !
நம் வாழ்க்கையை மற்றவர்களின் விருப்பு,வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, போலியான வாழ்க்கை விரும்பாது
வாழத் தலைப்பட்டால் அந்த குழந்தை உள்ளம் சாத்தியம்!
நீங்கள் சொல்வது சரி தன சிவா ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது ரொம்ப கஷ்டம் சிவா
ReplyDeleteஇந்த சிவா வேறு யாருமல்ல ..உங்கள் நண்பன் முரளியே தான்...!!
ReplyDeleteநீங்கள் சொல்லும் வாழ்க்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டு நானே தான்!
i know u man.
ReplyDeleteok but it is very very difficult